தீராத வயிற்று வலியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் சாரதாவுக்கு வயிற்று வலி குணமாகவில்லை.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா புராடுகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சனப்பா. இவரது மனைவி மதுஸ்ரீ. இந்த தம்பதிக்கு 2 மகளும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 2-வது மகள் சாரதா (வயது 18). இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சனப்பா இறந்துவிட்டார்.
இதனால் மதுஸ்ரீ தனது பிள்ளைகளுடன் சிக்பள்ளாப்பூர் அருகே உள்ள கனிவே நாராயணபுரா கிராமத்தில் குடியேறினார். இந்த நிலையில் சாரதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. மேலும் சாரதா அடிக்கடி பேய் பிடித்தது போல கத்துவதும், கோபப்படுவதுமாக இருந்துள்ளார். இதனால் அவரை மதுஸ்ரீ கோவிலுக்கும் அழைத்து சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தீராத வயிற்று வலியால் விரக்தியில் இருந்த சாரதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த சிக்பள்ளாப்பூர் போலீசார் சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






