ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 9 பேர் பலியான சோகம்

ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். தகவல் அறிந்து மாநில வேளாண் மந்திரி கே. அச்சன் நாயுடு அந்த பகுதிக்கு சென்றுள்ளார்.
அவர் சம்பவம் பற்றி கோவில் நிர்வாகிகளிடம் விவரம் கேட்டறிந்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story






