உ.பி.யில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு


உ.பி.யில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
x

குழந்தையை மண்ணுக்குள் புதைத்து சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டம் கொடாபூர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மரங்கள் நிறைந்த பகுதியில் இன்று பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வனப்பகுதி வழியாக சென்ற நபருக்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற நபர் பார்த்துள்ளார். அப்போது, அங்கு மண்ணுக்குள் பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்டிருந்ததும், குழந்தையின் கை சிறிய அளவில் மண்ணுக்கு வெளியே இருந்தவாறும் தெரிந்துள்ளது. இது குறித்து உடனடியாக அந்த நபர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக விரைந்து சென்ற போலீசார், மண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டனர். குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை பிறந்து 15 நாட்களே இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை மண்ணுக்குள் புதைத்து சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story