வேட்பாளர்களுக்கு பாஜக அழுத்தம் - பிரசாந்த் கிஷோர்


வேட்பாளர்களுக்கு பாஜக அழுத்தம் - பிரசாந்த் கிஷோர்
x

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் கடைசி நாளில் வேட்பு மனுவை திரும்பப்பெற்றனர்.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 6-ம் தேதி 121 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த 121 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் வாபஸ் பெறுவது நேற்று முன் தினம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 121 தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தொகுதிகளில் 1,690 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். மனுக்கள் வாபஸ் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இறுதியாக தற்போது 1.314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முசாபர்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தநிலையில், ஜன் சுராஜ் வேட்பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்புமனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜகவின் அச்​சுறுத்​தலே காரணம் என ஜன் சுராஜ் கட்சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்டியுள்​ளார்.

இதுகுறித்து ஜன் சுராஜ் கட்​சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் கூறிய​தாவது:

தேர்​தலில் யார் வென்​றாலும் கவலை​யில்​லை. நாங்​கள்​தான் ஆட்சி அமைப்​போம் என்ற பிம்​பத்தை பாஜக கடந்த சில ஆண்​டு​களாக உரு​வாக்​கி​யுள்​ளது. ஆனால், புதிய கட்​சி​யான ஜன் சுராஜ் கட்​சியை கண்டு தே.ஜ. கூட்​டணி பயப்​படு​கிறது. ஜன் சுராஜ் கட்சி வேட்​பாளர்​கள் தங்​கள் வேட்பு மனுக்​களை வாபஸ் பெற வற்​புறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

இதுதான் பாஜகவின் தன்மை. பிரஹம்பூரில் எல்ஜேபி கட்சி ஹுலாஸ் பாண்டே என்ற வலுவான வேட்பாளரை களமிறங்கியுள்ளது. எங்களின் வேட்பாளார் சத்ய பிரகாஷ் திவாரி 3 நாட்கள் அங்கு பிரசாரம் செய்தார். ஆனால், நேற்று மனுவை வாபஸ் பெற்றுள்ளார். ஜன் சுராஜ் வேட்பாளர்கள் ஓடவில்லை அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.

எங்​கள் கட்​சி​யின் தனாபூர் வேட்​பாளர் முதுர் ஷாவுக்கு அழுத்​தம் கொடுத்து மனுவை வாபஸ் பெற வைத்துள்​ளனர். இந்த அச்​சுறுத்​தல் காரண​மாக பாஜகவுக்கு வாக்​களிக்க கூடாது என தனாபூர் மக்​கள் முடிவு செய்​துள்​ளனர். முதுர் ஷாவை ராஷ்ட்​ரிய ஜனதா தள கட்​சி​யினர் கடத்​தி​ய​தாக பாஜக தலை​வர்​கள் கூறினர். ஆனால், அவர் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, தர்​மேந்​திர பிர​தான் ஆகியோ​ருடன் உள்ள போட்டோ வெளிவந்​துள்​ளது.

பாஜக எப்படி வேண்டுமானாலும் மிரட்டட்டும். ஆனால், எங்களின் 240 வீரர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் ஓட மாட்டார்கள். என்டிஏவை அப்புறப்படுத்தும் வரை ஓயவும் மாட்டார்கள். நவ.14-ல் எல்லாம் தெளிவாகப் புலப்படும்.

என்டிஏ-வுக்கு மகாகட்பந்தன் கூட்டணியைப் பார்த்து பயமில்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பாகுபலிகள், மணல் கொள்ளைக்காரர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். என்டிஏவுக்கு ஜன் சுராஜில் இருக்கும் மருத்துவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற நல்லவர்களைப் பார்த்துதான் பயம். எங்களது வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப்பெற வேண்டுமென பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது; இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடுவேன்

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story