பீகார்: ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள்..!


பீகார்: ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள்..!
x
தினத்தந்தி 11 Aug 2025 10:49 AM IST (Updated: 11 Aug 2025 11:11 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார் ஆசிரியர் கான்.

பாட்னா,

பீகாரை சேர்ந்த பிரபல ஆசிரியர் கான். கான் சார் என தனது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர்.

வடமாநிலத்தில் மூத்த சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.கான் சார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர்.

மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராக்கி குறித்து உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பேசிய ஆசிரியர் கான், தனது மணிக்கட்டில் 15,000-க்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் எடை காரணமான கையை கூட உயர்த்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

1 More update

Next Story