குஜராத்தில் இருந்துதான் வாக்கு திருட்டை பாஜக ஆரம்பித்துள்ளது: ராகுல் காந்தி


குஜராத்தில் இருந்துதான் வாக்கு திருட்டை பாஜக ஆரம்பித்துள்ளது: ராகுல் காந்தி
x

குஜராத்தில் பெயர் தெரியாத கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பாட்னா,

வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்குரிமை பேரணியை பீகாரில் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற பேரணியில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொண்டார். பேரணியின் போது ராகுல் காந்தி கூறியதாவது:

குஜராத்தில் சில பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன, அவற்றின் பெயர்களை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அந்த கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் மிகக் குறைந்த தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளன. குறைவாகவே செலவிட்டுள்ளன. இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது? தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது இங்கும் பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இந்த முறையும் மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றுமா?” என்றார்.

ராகுல் காந்தி மேலும் கூறுகையில், வாக்குத் திருட்டை குஜராத்திலிருந்துதான் பாஜக ஆரம்பித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், பாஜக இன்னும் 40-50 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்கும் என்று பேசினார். அப்போது, நான் ஆச்சரியப்பட்டேன். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதால் அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம்” என்றார்.

1 More update

Next Story