பெங்களூரு மாநகராட்சியை 5-ஆக பிரிப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு


பெங்களூரு மாநகராட்சியை 5-ஆக  பிரிப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு
x

பெங்களூரு மாநகராட்சி பிரிவினையை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சட்ட போராட்டம் நடத்துவோம் என்று பாஜக கூறியுள்ளது.

பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் அரசு கடந்த 2013-ம் ஆண்டு முதலே பெங்களூரு மாநகராட்சியை பிரிக்க முயற்சி செய்து வந்தது. இந்த நிலையில் தற்போது மாநகராட்சியை 5 ஆக பிரித்துள்ளனர். இது பெங்களூருவின் வளர்ச்சிக்கு எதிரானது. இதன் பின்னணியில் சுயநலம், அரசியல் உள்நோக்கம் உள்ளது. காங்கிரஸ் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது.

பெங்களூருவின் முழுமையான தன்மை சீர்கெட்டுவிட்டது. பெங்களூருவை அரசியல் பரிசோதனை கூடமாக மாற்றி கொண்டுள்ளனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெங்களூருவை பிரித்துள்ளனர். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சி தேர்தலை நடத்துவதாக கூறினார்கள். இதுவரை மாநகராட்சி தோ்தலை நடத்தவில்லை.

காங்கிரஸ் கட்சி பெங்களூருவுக்கு நல்லது செய்யாது. தொழில்நுட்பம் உள்ளது. அதை கொண்டு நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடியும். பெங்களூரு மாநகராட்சி பிரிவினையை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சட்ட போராட்டம் நடத்துவோம். கவர்னரிடமும் நாங்கள் ஆட்சேபனையை தெரிவித்துள்ளோம். மைசூரு விழாவில் பெயரை குறிப்பிடாமல் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி சித்தராமையா அவமரியாதை இழைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story