காஷ்மீர்: போலீஸ் நிலையத்தில் வெடி விபத்து - 8 பேர் படுகாயம்

டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்து விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் புல்வாமா போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த வெடிமருந்து நேற்று இரவு வெடித்தது. இந்த சம்பவத்தில் 8 போலீசார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






