பசு கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்


பசு கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
x

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அஜய் காலில் காயம் ஏற்பட்டது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அசம்ஹர் மாவட்டம் கொட்வா ஜலால்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அஜய் (வயது 26). இவர் பசு கடத்தலில் ஈடுபட்டு வந்தார். உ.பி.யில் இருந்து பசுக்களை கடத்தி பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்தார். அஜய்யை கைது செய்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பாலியா மாவட்டம் நரசிங்கபூர் அஜய் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த அஜய் போலீசாரை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அஜய் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் அஜய் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story