நான் அதிபராக இருக்கும் வரை சீனா அந்த காரியத்தை செய்யாது: டொனால்டு டிரம்ப்


நான் அதிபராக இருக்கும் வரை சீனா அந்த காரியத்தை செய்யாது: டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 17 Aug 2025 6:13 PM IST (Updated: 17 Aug 2025 7:40 PM IST)
t-max-icont-min-icon

நான் அதிபராக இருக்கும் தைவான் மீது சீனா போர் தொடுக்காது என நினைக்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது. இதனால் கிழக்கு ஆசியாவில் அவ்வப்போது பதற்றமான சூழல் காணப்படுகிறது. தைவானுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிப்பதால், சீனாவும் அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் பகையுணர்வை காட்டி வருகின்றன.

சர்வதேச அளவில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், சீனா- தைவான் இடையே மோதல் ஏற்பட்டால் நிலமை மேலும் மோசமாகும் நிலை உள்ளது. இந்த நிலையில், நான் அதிபராக இருக்கும் வரை தைவான் மீது சீனா படையெடுப்பை நடத்தாது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது; - "சீன அதிபர் ஜி ஜின்பிங் தெளிவாக என்னிடம் சொன்னார். நான் அதிபராக இருக்கும் தைவான் மீது சீனா போர் தொடுக்காது என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.. ஜின்பிங் என்னிடம், நீங்கள் அதிபராக இருக்கும் வரை நான் இதை ஒருபோதும் இதை செய்ய மாட்டேன் என்று கூறினார். சீனா இந்த விவகாரத்தில் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும் ஜின்பிங் என்னிடம் சொன்னார்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story