தலைக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை


தலைக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
x

இந்த என்கவுன்டர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் அகமது கான் (வயது 26). இவர் மீது லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பாலியல் வன்கொடுமை, கொள்ளை, பசு கடத்தல், வாகன திருட்டு உள்பட 17 வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அகமது கான் அறிவிக்கப்பட்டிருந்தார். மேலும், அகமது கான் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் தரப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில் அகமது கான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த அகமது கான் போலீசார் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தினர். போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் அகமது கான் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அகமது கானை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அகமது கானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த என்கவுன்டர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story