இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது; மத்திய அரசு தகவல்


இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது; மத்திய அரசு தகவல்
x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

டெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் நாட்டில் மொத்தமுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.

அதன்படி, இந்தியாவில் அலோபதி மருத்துவத்தில் 13 லட்சத்து 88 ஆயிரத்து 185 பதிவு பெற்ற டாக்டர்கள் உள்ளனர். அதேபோல், ஆயுர்வேத மருத்துவத்தில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 பதிவு பெற்ற டாக்டர்கள் உள்ளனர். இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது. இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் 387ல் இருந்து 818 ஆக அதிகரித்துள்ளது. இளநிலை மருத்துவ இடம் 51 ஆயிரத்து 348ல் இருந்து 1 லட்சத்து 28 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், முதுநிலை மருத்துவ இடம் 31 ஆயிரத்து 185ல் இருந்து 82 ஆயிரத்து 59ஆக அதிகரித்துள்ளது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story