அறைக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை; 70 வயது கணவர் மீது பேராசிரியை பரபரப்பு புகார்


அறைக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை; 70 வயது கணவர் மீது பேராசிரியை பரபரப்பு புகார்
x

எனக்கு கிடைத்த வெற்றி, புகழை கணவர் வெறுத்தார் என புகாரில் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் பெங்களூரு கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 67 வயது ஓய்வு பெற்ற பேராசிரியை. இவர் மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் முதல்வராகவும் இருந்துள்ளார். இவரது கணவருக்கு 70 வயது ஆகிறது. இந்த தம்பதி 1983-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இல்லற வாழ்க்கையில் இணைந்தே பயணித்த இந்த முதிய தம்பதிக்குள் தற்போது கசப்பான சம்பவங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அந்த பேராசிரியை தனது கணவர் மீது கோவிந்தராஜ் நகர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், எனக்கும், கணவருக்கும் திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகின்றன. 1983-ம் ஆண்டு பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

எனது கணவர் நான் பேராசிரியை, கல்லூரி முதல்வராக பணியாற்றியதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு கிடைத்த வெற்றி, புகழை அவர் வெறுத்தார். எனது பெயரில் இருந்த சொத்துகள், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை அவரது பெயருக்கு மாற்றும்படி தொல்லை கொடுத்து வந்தார்.

1993-ம் அண்டு அவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் பெரும்பாலும் முழுக்க முழுக்க எனது சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார். எனது சம்பாத்தியத்தை அவர் துஷ்பிரயோகம் செய்து வந்தார்.

கடந்த நவம்பர் 22-ந்தேதி நான் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது என்னை கட்டாயப்படுத்தி ஒரு அறைக்குள் இழுத்து சென்றார். அங்கு வைத்து என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர் எனது கழுத்தை நெரித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். அத்துடன் 2 மகன்களையும் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டினார்.

எனது கணவரின் தொடர் சித்ரவதையால் எனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை மகன்கள் பொருத்தியுள்ளனர். அதில், இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் பதிவாகி உள்ளது. ஏற்கனவே எனக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கணவரின் தொல்லையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகாருக்கு ஆளானவர் 70 வயது முதியவர் என்பதால் போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

1 More update

Next Story