குஜராத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

குஜராத்தில் ரிக்டர் 3.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
Published on

காந்திநகர்,

குஜராத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இரவு 9.15 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 21.23 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com