கட்டுமான நிறுவனத்தின் ரூ.81 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் வித்யவாசினி குரூப்
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் வித்யவாசினி குரூப். இந்நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து 764 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பணமோசடி புகாரில் வித்யவாசினி குரூப் நிறுவனத்தின் 81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. இந்த வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் விஜய் ராஜேந்திர பிரசாத், அஜய் ராஜேந்திர பிரசாத், வங்கி அதிகாரிகள் உள்பட பல்வேறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






