விவசாயியை அடித்துக்கொன்ற புலி - அதிர்ச்சி சம்பவம்

கடந்த 15 நாட்களில் புலி தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விவசாயியை அடித்துக்கொன்ற புலி - அதிர்ச்சி சம்பவம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சரகூர் தாலுகா ஹலி ஹிகுடிலு கிராமத்தை சேர்ந்த விவசாயி சவுதயா நாயக் (வயது 35). இவர் இன்று காலை கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சவுதயா நாயக்கை புலி அடித்துக்கொன்றது.

வனப்பகுதிக்கு சென்ற சவுதயா நாயக் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கிராமத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, புலி தாக்கி வனப்பகுதியில் சடலமாக கிடந்த சவுதயா நாயக்கின் உடலை கிராமத்தினர் கண்டுபிடித்தனர். புலிகள் சரணாயலம் அமைந்துள்ளதால் கடந்த இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த பகுதியில் கடந்த 15 நாட்களில் புலி தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பெந்திபூர் மற்றும் நஹராலொல் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சபாரி, டிரக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com