ஜார்க்கண்ட்: ரூ. 6.27 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 5 பேர் கைது


ஜார்க்கண்ட்: ரூ. 6.27 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 5 பேர் கைது
x

கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று காலை சுகதேவ் நகர், சிரோண்டி பஜார் பகுதிகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, போதைப்பொருள் வைத்திருந்த 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1.30 கிலோ எடையுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 6.27 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story