ஓவர்டேக் செய்ய முயன்றபோது எதிரில் வந்த லாரி, பைக்குகள் மீது வேன் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு


ஓவர்டேக் செய்ய முயன்றபோது எதிரில் வந்த லாரி, பைக்குகள் மீது வேன் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 5 Oct 2025 4:01 PM IST (Updated: 5 Oct 2025 5:45 PM IST)
t-max-icont-min-icon

சாலை கட்டுமானப் பணிகள் காரணமாக நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள ராதன்பூர் அருகே லாரி மற்றும் இரண்டு பைக்குகள் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10 மணியளவில் மோதி பிப்லி கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சாலை கட்டுமானப் பணிகள் காரணமாக நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 15 பயணிகளுடன் அந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. மேலும் இரண்டு பைக்குகள் மீதும் வேன் மோதியது.

இந்த பயங்கர விபத்தில் வேனில் பயணித்த இரண்டு பேர் மற்றும் பைக்குகளில் வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story