பாஸ்டேக்கில் ஆயிரம் ரூபாய் இலவசமாக கிடைக்கும்: வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது இதுதான்


பாஸ்டேக்கில் ஆயிரம் ரூபாய் இலவசமாக கிடைக்கும்: வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது இதுதான்
x

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது.

சென்னை,

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது பாஸ்டேக் முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதற்காக இலவச டாய்லட் வசதி உள்ளது. ஆனால் இது பல சுங்கச்சாவடிகளில் முறையாக பராமரிப்பது இல்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிப்பறைகள் குறித்து தகவல் அளித்தால், ரூ.1,000 வெகுமதி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் அசுத்தமாக இருந்தால் அதுகுறித்து தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் வாகனங்களின் பாஸ்டேக் கில் ரூ. 1000 ரீசார்ஜ் செய்யப்படும்.இந்த பரிசுத் திட்டம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் ரூ. 1,000 வெகுமதி பெறுவதற்கு ‘ராஜ் மார்க் யாத்ரா’ செயலியை (App) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், பெயர், எந்த இடத்தில் சுங்கச்சாவடி டாய்லட் உள்ளது, தங்கள் வாகனத்தின் பதிவு எண், மொபல் நம்பர் போன்ற தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.அத்துடன் அசுத்தமாக இருக்கும் டாய்லட் தொடர்பான போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை ஆய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் ‘பாஸ் டேக்’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story