பைக் மீது மோதாமல் தவிர்க்க லாரி மீது மோதி விபத்தில் சிக்கிய அரசு பஸ்; 4 பேர் பலி - உ.பி.யில் அவலம்

அரசு பஸ் விபத்தில் சிக்கியதில் 21 பேர் காயமடைந்தனர்.
ஹத்ராஸ்,
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சாமமை கிராமத்தில் அலிகார்-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அலிகார் நகரில் இருந்து ஹத்ராஸ் நோக்கி சென்ற அந்த பஸ், சாலையில் சென்ற பைக் ஒன்றின் மீது மோதி விடாமல் தவிர்ப்பதற்காக அதன் ஓட்டுநர் பஸ்சை திருப்பியுள்ளார்.
அப்போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. எனினும், பஸ்சில் இருந்த சில பயணிகள் கீழே குதித்து தப்ப முயன்றனர். இந்த விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சின் அடியில் சிக்கிய ஒரு பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
Related Tags :
Next Story






