இமாசல பிரதேசம்: ஜூன் 20-ல் இருந்து இதுவரை கனமழைக்கு 34 பேர் பலி


இமாசல பிரதேசம்:  ஜூன் 20-ல் இருந்து இதுவரை கனமழைக்கு 34 பேர் பலி
x

இமாசல பிரதேசத்தில் 17 பேர் மழை தொடர்பான சம்பவங்களிலும், 17 பேர் சாலை விபத்துகளிலும் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், வருவாய், தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சி துறை மந்திரி ஜெகத் சிங் நேகி இன்று கூறும்போது, இமாசல பிரதேசத்தில் கடந்த 20-ந்தேதி முதல் மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் சிக்கி இதுவரை 34 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

இவர்களில் 17 பேர் மழை தொடர்பான சம்பவங்களிலும், 17 பேர் சாலை விபத்துகளிலும் சிக்கி உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் பெருத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவுகள், வெள்ள நீர் தேக்கம் மற்றும் மின் இணைப்பு, சாலை இணைப்பு போன்றவையும் பாதிக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் தரம்ஷாலாவில் வெள்ளத்தில் 9 பேர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 6 பேரின் உடல்கள் நேற்று மாலை மீட்கப்பட்டன. ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டது.

1 More update

Next Story