டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து 'இந்தியா' கூட்டணி நிர்வாகிகள் மனு


டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மனு
x
தினத்தந்தி 2 Jun 2024 7:25 PM IST (Updated: 2 Jun 2024 7:36 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது.

புதுடெல்லி,

7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் அதிகாரிகளை 'இந்தியா' கூட்டணி கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அப்போது ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

"தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 3 முக்கிய பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளோம். ஓட்டு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தபால் ஓட்டுகளை முதலில் எண்ணி, அதன் முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும். தபால் ஓட்டுகளை எண்ணி முடித்த பிறகே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.'' என கூறினார்


Next Story