சாலையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை: போலீசார் விசாரணை

அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக மாவட்டம் ஒசகோட்டையில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குழந்தை உயிருடன் வீசப்பட்டதா? அல்லது இறந்தே பிறந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






