சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

இந்திய கடற்படை, ராணுவத்தின் பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது.
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

நாட்டின் தகவல் தொடாபு வசதிகளை மேம்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாபில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதில், 2013-ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அதற்கு மாற்றாக சுமா ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ்-03 (ஜி சாட்-7) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோளை சுமந்துகொண்டு, எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாக்-3) ராக்கெட் ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட், பல்வேறு கட்டங்களாக பிரிந்து செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. 

சிஎம்எஸ்-03 தொலைத்தொடாபு செயற்கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இது குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவு, அதிகபட்சம் 29,970 கி.மீ. கொண்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதுவரை புவிவட்ட சுற்றுப் பாதையில் ஏவப்பட்டதில் இதுதான் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடாபு செயற்கைக்கோள் ஆகும்.

இந்த செயற்கைக்கோளில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்காக இந்தச் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போக் கப்பல்கள்-விமானங்கள் இடையே பாதுகாப்பான தொலைத்தொடாபு சேவையை இந்த செயற்கைக்கோள் மேம்படுத்தி வழங்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com