மராட்டியம்: விமானம் மீது சரக்கு லாரி மோதியதில் இறக்கை சேதம்


மராட்டியம்:  விமானம் மீது சரக்கு லாரி மோதியதில் இறக்கை சேதம்
x

விமானத்தின் இறக்கையின் உயரம் பற்றிய சரியான கணிப்பு இல்லாமல் ஓட்டுநர் செயல்பட்டு உள்ளார்.

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜா சர்வதேச விமான நிலையத்தில் ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் போயிங் 737-மேக்ஸ் ரக விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, சரக்கு லாரி ஒன்று தற்செயலாக அதன் மீது மோதியது.

இந்த விபத்தில், விமானத்தில் வலதுபுற இறக்கையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், இதனால், பயணிகளுக்கோ அல்லது விமான பணியாளர்களுக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதனை தொடர்ந்து விமானத்தில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் மற்றொரு விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு அதில் இருந்த சரக்குகள் இறக்கப்பட்டு வந்தன. அந்த பணியில் இந்த சரக்கு லாரி ஈடுபட்டு இருந்தது.

அப்போது, அதன் ஓட்டுநர் விமானத்தின் இறக்கையின் உயரம் பற்றிய சரியான கணிப்பு இல்லாமல் செயல்பட்டு உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், விபத்து ஏற்பட்டு உள்ளது என்று அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

1 More update

Next Story