டெல்லி விமான நிலைய பஸ்சில் திடீர் தீ; அசம்பாவிதம் தவிர்ப்பு

டெல்லி விமான நிலையத்தில், விமானத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி விமான நிலைய பஸ்சில் திடீர் தீ; அசம்பாவிதம் தவிர்ப்பு
Published on

புதுடெல்லி,

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகளை விமானத்திற்கு அழைத்துச் செல்லும் அந்நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது, திடீரென அதில் தீப்பற்றி எரிந்துள்ளது. கொழுந்து விட்டு எரிந்த இந்தத் தீயால், பஸ் பெருமளவு எரிந்து நாசமானது.

இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தின் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். தீப்பிடித்து எரிந்த பஸ் ஏர் இந்தியா விமானத்தின் அருகே சில மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. நல்வாய்ப்பாக விமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com