நாயை ஆட்டோவில் கட்டி தரதரவென இழுத்துச்சென்ற கொடூரம்

வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயின் உரிமையாளர் நிதினை கைது செய்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கன்சா பகுதியை சேர்ந்தவர் நிதின். இவர் செல்லப்பிராணி நாய் வளர்த்து வருகிறார். இதனிடையே, நிதின் செல்லப்பிராணி நாயை ஆட்டோவில் கட்டி சாலையில் தரதரவென இழுத்துச்சென்றார்.
ஆட்டோவின் பின்பக்கத்தில் கயிற்றில் கட்டப்பட்ட நாய் சாலையில் இழுத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூகவலைதளத்தில் கருத்துக்கள் எழுந்தன.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயின் உரிமையாளர் நிதினை கைது செய்தனர். மேலும், செல்லப்பிராணி நாய் தற்போது நலமுடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






