திருப்பதி கோவில் அன்னதான திட்டத்துக்கு ரூ.11 கோடி காணிக்கை; மும்பை பக்தர் வழங்கினார்


திருப்பதி கோவில் அன்னதான திட்டத்துக்கு ரூ.11 கோடி காணிக்கை; மும்பை பக்தர் வழங்கினார்
x

காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

திருமலை,

மும்பையைச் சேர்ந்த பிரசித் யூனோ குடும்ப அறக்கட்டளையைச் சேர்ந்த பக்தர் துஷார்குமார். இவர், நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னப்பிரசாதத்திட்ட அறக்கட்டளைக்கு ரூ.11 கோடியை காணிக்கையாக வழங்கினார். அந்தக் காணிக்கை தொகைக்கான வங்கி வரைவோலையை திருமலையில் உள்ள தேவஸ்தான கூடுதல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் வைத்து கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பெற்றுக் கொண்டார்.

அதேபோல், ஆந்திர மாநிலம் பீமாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடரமணா என்ற பக்தர் கோவில் அன்னப்பிரசாதத்திட்ட அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் காணிக்கை தொகைக்கு வங்கி வரைவோலையாக வழங்கினார்.

மேலும் திருப்பதியைச் சேர்ந்த பக்தர் சாதுபிரித்வி, கோவில் அன்னப்பிரசாதத் திட்ட அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சத்தை காணிக்கையாக வழங்கினார். காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

1 More update

Next Story