மராட்டியம்: சகோதரனை கொன்ற நேபாள இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட சூரஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை,
நேபாள நாட்டின் பனுமதி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சூரஜ் மோகன் (வயது 30). இவரது சகோதரன் யோகேஷ் மோகன் (வயது 35). இருவரும் மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டம் வாசி பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், சூரஜ்-க்கும் அவரது சகோதரன் யோகேசுக்கும் நேற்று முன் தினம் மாலை பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சூரஜ் தனது சகோதரன் யோகேசை கத்தியால் குத்திக்கொன்றுள்ளார். பின்னர், மராட்டியத்தில் இருந்து நேபாளத்திற்கு தப்பியோட சூரஜ் திட்டமிட்டுள்ளார். இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று யோகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், நேபாளத்திற்கு தப்பியோட முயன்ற சூரஜை மராட்டியத்தின் பெல்ஹர் பகுதியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூரஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.






