அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; காவலாளி பலி


அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; காவலாளி பலி
x
தினத்தந்தி 25 March 2025 4:27 AM IST (Updated: 25 March 2025 1:23 PM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காவலாளி உயிரிழந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் வித்யாவிகார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 13 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், குடியிருப்பில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

மேலும், குடியிருப்புக்குள் சிக்கி இருந்த 20 பேரை பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சில மணிநேர போராட்டத்திற்குப்பின் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்துவந்த காவலாளி உதய் கங்கன் (வயது 45) உயிரிழந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story