சபரிமலை சீசனையொட்டி பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்

சன்னிதானத்தில் தங்குவதற்கு அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவும் நாளை முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசனையொட்டி பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலையில் சீசனையொட்டி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் சீசன் தொடங்குகிறது. இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சீசனை முன்னிட்டு பூஜை, வழிபாடுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. அதேபோல் சன்னிதானத்தில் தங்குவதற்கு அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவும் நாளை முதல் தொடங்கும். முன்பதிவு செய்ய விரும்புவோர் https://www.onlinetdb.com என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com