ஜப்பான் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து


ஜப்பான் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து
x

Filepic

தினத்தந்தி 2 Oct 2024 11:00 AM GMT (Updated: 2 Oct 2024 12:22 PM GMT)

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ளது. எனவே இக்கட்சியின் தலைவரே பிரதமர் ஆவார். அதன்படி கடந்த 2021-ல் பிரதமர் புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இவரது அரசாங்கத்தின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. அதன்படி பிரதமர் வேட்பாளராக ஆளுங்கட்சி சார்பில் 9 பேர் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற ஷிகெரு இஷிபா (வயது 67) பிரதமராக நேற்று தேர்வானார். அதனை தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற இஷிபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

அந்தப் பதிவில், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜப்பான் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக்கில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.


Next Story