போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கர்வார் பகுதியை சேர்ந்தவர் கீரப்பா (வயது 55). இவர் பண்ட்வால் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவுப்பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற கீரப்பா இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று காலை கீரப்பா நீண்ட நேரமாகியும் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு உள்ள அறையில் கீரப்பா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார், கீரப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினை, நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கீரப்பா தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.






