மின்சார ரெயிலில் பெண் பயணிகளை மானபங்கம் செய்த போலீஸ்காரர் கைது


மின்சார ரெயிலில் பெண் பயணிகளை மானபங்கம் செய்த போலீஸ்காரர் கைது
x

மின்சார ரெயிலில் பெண் பயணிகளை மானபங்கம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மிராபயந்தர்- வசாய்விரார் கமிஷனரேட் அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அமோல் சப்காலே. இவர் சம்பவத்தன்று போரிவிலியில் இருந்து விரார் நோக்கி சென்ற மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் போலீஸ் சீருடையில் ஏறினார். அப்போது அவர் குடிபோதையில் இருப்பதை பெண் பயணிகள் அறிந்தனர்.

மகளிர் பெட்டியில் ஏறிய அவர் பெண் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடத்துவதாக கூறி அங்கு நின்று கொண்டிருந்த பெண் பயணிகளின் உடலை தொட்டு மானபங்கம் செய்தார். இதனை கண்ட சில பெண் பயணிகள் அவரது நடவடிக்கையை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அந்த ரெயில் வசாய் ரெயில் நிலையம் வந்த போது பெண் பயணிகள் போலீஸ்காரர் அமோல் சப்காலேவை பிடித்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் அமோல் சப்காலேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story