ஜப்பான், சீனா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி


ஜப்பான், சீனா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
x

ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்

புதுடெல்லி,

நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு பிரதமர் மோடி கடந்த 28ஆம் தேதி புறப்பட்டுச் சென்றார். ஜப்பானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஜப்பானில் தனது பயணத்தை முடித்த பிரதமர் மோடி, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க தனியார் விமானம் மூலம் அங்கிருந்து சீனாவுக்கு புறப்பட்டார். தியான்ஜின் விமான நிலையத்தில் இறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார்.

இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. சந்திப்புகள் முடிந்த பிறகு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனியார் விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். இன்று இரவு 7.45 மணியளவில் நாடு திரும்பிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

1 More update

Next Story