வெறிநாய் கடித்து இறந்த பசுமாட்டின் பாலை குடித்த கிராமத்தினருக்கு ரேபிஸ் தடுப்பூசி


வெறிநாய் கடித்து இறந்த பசுமாட்டின் பாலை குடித்த கிராமத்தினருக்கு ரேபிஸ் தடுப்பூசி
x

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரின் பசு மாட்டை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் ராம்திக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பசுமாடு வளர்த்து வந்தார். இவரது மாட்டை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்திருந்தது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட மக்களுக்கு விவசாயி அந்த மாட்டின் பாலை வழங்கியுள்ளார். இதையடுத்து திடீரென அந்த பசுமாடு இறந்ததால் கிராமத்தினர் அனைவரும் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார நிலையம் சார்பில் 160 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

1 More update

Next Story