மதுரையில் அனுமதின்றி கட்டப்பட்ட கோவிலை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை


மதுரையில் அனுமதின்றி கட்டப்பட்ட கோவிலை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை
x

மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி அனுமதியின்றி கோவில் கட்டப்பட்டுள்ளது.

டெல்லி,

மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி அனுமதியின்றி கோவில் கட்டப்பட்டுள்ளது. திறந்த வெளிக்கான ஒதுக்கீடு பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோவிலை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அந்த குடியிருப்பு சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், கோவிலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனுமதியின்றி கட்டப்பட்ட கோவிலை இடிக்க இடைக்கால தடை விதித்தது.

1 More update

Next Story