காட்டு யானையுடன் 'செல்பி' எடுக்க முயன்ற வாலிபர் பலி


காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் பலி
x

காட்டு யானையுடன் ‘செல்பி’ எடுக்க முயன்ற வாலிபர் பலியானார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வனப்பகுதி நிறைந்த பகுதி ஆகும். அங்குள்ள முட்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகாந்த் கத்ரே(வயது24).

இவருக்கு அந்த பகுதியில் நடமாடிய காட்டு யானையுடன் 'செல்பி' எடுக்கும் விபரீத ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் ஆபத்தை உணராமல் நேற்று காட்டு யானையின் அருகில் சென்றார்.

பின்னர் யானையுடன் 'செல்பி' எடுப்பதற்காக செல்போனை எடுத்து கேமராவை ஆன் செய்தார். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அந்த யானை சசிகாந்த் கத்ரேவை தும்பிக்கையால் வளைத்து பிடித்தது. பின்னர் அவரை கீழே போட்டு காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

1 More update

Next Story