தெலுங்கானாவில் தாய்-தந்தைக்கு கோவில் கட்டிய மகன்கள்


தெலுங்கானாவில் தாய்-தந்தைக்கு கோவில் கட்டிய மகன்கள்
x
தினத்தந்தி 19 Sept 2025 4:47 PM IST (Updated: 19 Sept 2025 5:30 PM IST)
t-max-icont-min-icon

எனது அப்பா வியர்வை சிந்திய நிலத்தில் பெற்றோருக்கு கோவில் கட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி என்று மூத்த மகன் கூறியுள்ளார்.

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாபூர் அடுத்த ருஸ்டம்பேட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. ,விவசாயி. இவரது மனைவி பெண்டம்மா இந்த தம்பதிக்கு சித்தி ராமு மற்றும் பஸ்வானந்தம் என 2 மகன்கள் உள்ளனர். பஸ்வானந்தம் ஹோமியோபதி டாக்டராக வேலை செய்து வருகிறார்.

ஈஸ்வரப்பா, பெண்டம்மா இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இறந்து போன தங்களது பெற்றோர்களின் நினைவாக கோவில் கட்டி பளிங்கு கற்களால் பெற்றோர்களின் உருவத்தை செய்து கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பஸ்வானந்தம் கூறுகையில்:-

நரசாபூர் ராய ராவ் ஏரி நிரம்பினால் எங்களது விவசாய நிலத்தில் மணல் குவிந்து விடும். அதனை அகற்ற என்னுடைய தந்தை கடுமையாக உழைத்தார். விவசாயம் செய்து கொண்டே என்னை மருத்துவ படிப்பு படிக்க வைத்தார். அவர் வியர்வை சிந்திய நிலத்தில் பெற்றோருக்கு கோவில் கட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story