ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து; கணவன் - மனைவி பலி


ஸ்கூட்டர் மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து; கணவன் - மனைவி பலி
x

அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 40). இவரது மனைவி சமீன் பானு. கணவன் - மனைவி இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் ரிச்மவுண்ட் பகுதியில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் தம்பதியின் ஸ்கூட்டர் உள்பட 4க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த இஸ்மாயில் அவரது மனைவி சமீன் பானு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர்.

1 More update

Next Story