பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு


பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
x
தினத்தந்தி 16 July 2024 12:48 PM IST (Updated: 16 July 2024 1:14 PM IST)
t-max-icont-min-icon

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமரை நேரில் சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை 11.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னருடன் அவருடைய மனைவி மற்றும் பேரனும் உடன் சென்றுள்ளனர். டெல்லிக்கு தனிப்பட்ட முறையில் கவர்னர் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆலோசித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story