தெலுங்கானா: தொடர் செயின் பறிப்பில் கணவர்... 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை


தெலுங்கானா: தொடர் செயின் பறிப்பில் கணவர்... 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை
x

தெலுங்கானாவில் கணவர் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வேதனையில் 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வசித்து வந்த பெண்ணின் கணவர் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண், செயின் பறிப்பு தொழிலை விட்டு விடும்படி கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், கணவரோ அதனை கேட்காமல், தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதனால், மனவேதனை அடைந்த அந்த பெண் அவருடைய 2 மகள்களையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்துள்ளார். இதன்பின்னர், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனை போலீசார் நேற்று தெரிவித்தனர்.

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதற்காக, கணவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெற்றோருடனான உறவை கணவருக்காக அந்த பெண் துண்டித்து விட்டார்.

இந்நிலையில், கணவர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த வேதனையில் குழந்தைகளை கொலை செய்து விட்டு, அந்த பெண்ணும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

1 More update

Next Story