தெலுங்கானா: மட்டன் கறி சமைக்க மறுத்த மனைவி படுகொலை; கணவர் வெறிச்செயல்


தெலுங்கானா:  மட்டன் கறி சமைக்க மறுத்த மனைவி படுகொலை; கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 March 2025 10:10 PM IST (Updated: 12 March 2025 10:14 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் மனைவி மட்டன் கறி சமைக்க மறுத்த ஆத்திரத்தில் அவரை கணவர் படுகொலை செய்த கொடூரம் தெரிய வந்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் மகபூபாபாத் நகரில் வசித்து வந்தவர் மலோத் கலாவதி (வயது 35). இந்நிலையில், நேற்றிரவு மட்டன் கறி சமைக்கவில்லை என கூறி கலாவதி உடன் அவருடைய கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, வேறு யாரும் வீட்டில் இல்லை.

இந்நிலையில், வாக்குவாதம் முற்றியதில் மனைவியை அடித்து, தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கலாவதி உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சான்றுகளை சேகரித்து வருகின்றனர்.

ஒரு சிறிய விசயம் குடும்ப வன்முறையாக உருவெடுத்து, இதுபோன்ற சம்பவத்திற்கு வழிவகுத்து விட்டது என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனை நம்பவே முடியவில்லை என்றும் கூறினர். இதனால், குடும்ப வன்முறை அதிகரித்து வருவது சுட்டி காட்டப்பட்டு உள்ளதுடன், சட்ட ரீதியிலான கடுமையான நடவடிக்கை தேவையாக உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.


Next Story