பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகின்றனர்; மோடி, நிதிஷ்குமார் மீது ராகுல்காந்தி விமர்சனம்


பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை  நாசமாக்குகின்றனர்;  மோடி, நிதிஷ்குமார் மீது ராகுல்காந்தி விமர்சனம்
x

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பீகார் எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்தங்கியுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாட்னா,

பீகார் மாநில இளைஞர்களுடன் உரையாடிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பகிர்ந்து ராகுல் கூறியிருப்பதாவது:

சில நாட்களுக்கு முன்பு, பீகார் மாநில இளைஞர்களுடன் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு பிரச்சினை குறித்து உரையாடலை நடத்தினேன். மேலும், அவர்களின் அவலநிலைக்கு ஒரே ஒரு குற்றவாளி மட்டுமே இருக்கிறது. அது ஆளும் நிதிஷ் குமார், பிரதமர் மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு.

இளைஞர்களின் கனவு மற்றும் ஆசைகளை அழித்துவிட்டது. தங்களை மாநில அரசு படுகுழியில் தள்ளி விட்டது என்பதை அம்மாநில இளைஞர்கள் நன்கு அறிவார்கள். பீகார் மாநிலம் 9-10ம் வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றலில், 29 மாநிலங்களில் 27வது இடத்தில் உள்ளது. தொழில் மற்றும் உற்பத்தித் துறையில் 23வது இடத்தில் இருக்கிறது. குழந்தை இறப்பு விகிதத்தில் 27 வது இடத்தில் இருக்கிறது. தனிநபர் வருமானத்தில் 25 வது இடத்தில் இருக்கிறது. இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. இவை ஒரு கண்ணாடி.

இந்த பாஜக கூட்டணி அரசு பீகாரை முன்னேற்றத்திலிருந்து எவ்வளவு தூரம் பின்வாங்க வைத்துள்ளது என்பதைக் காட்டும் ஒரு பின்புறக் கண்ணாடி. நான் சந்தித்த அனைத்து பீகாரி இளைஞர்களும் நம்பமுடியாத அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் புத்திசாலிகள். அவர்கள் தங்கள் திறமை மற்றும் கடின உழைப்பால் எல்லா இடங்களிலும் பிரகாசிக்க முடியும். ஆனால் வாய்ப்புகளுக்குப் பதிலாக, அரசு அவர்களுக்கு வேலையின்மை மற்றும் ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியுள்ளது. மாற்றத்திற்கான நேரம் இது. நீதிக்கான மகா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய நேரம். பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை மோடியும், நிதிஷ்குமாரும் இணைந்து நாசமாக்குகின்றனர்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பிஹார் எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்தங்கியுள்ளது; கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் பின்தங்க இவர்களே காரணம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

1 More update

Next Story