கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்.. கார்கள் நேருக்கு-நேர் மோதி ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி


கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்.. கார்கள் நேருக்கு-நேர் மோதி ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி
x

கோவிலுக்கு அவர்கள் சென்ற போது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

நகரி,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசஹலி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 76). இவர் தனது மகள் மீனாட்சி(32). மருமகன் சதீஷ்(34) மற்றும் பேரன்கள் பனீத்(5), ரித்விக்(4) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மந்திராலயம் ராகவேந்திர சாமி கோவிலில் தரிசனத்திற்காக நேற்று குடும்பத்துடன் வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எம்மிகனூர் அருகே கோட்டைகள் என்ற இடத்தில் காரில் அவர்கள் சென்ற போது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த வெங்கடேஷ், மீனாட்சி, சதீஷ் மற்றும் பேரன்களான பனீத், ரித்விக் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த ஆதோனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆதோனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் சேத்தன் மற்றும் அதே காரில் பயணித்த கங்கம்மா என்ற பெண்ணும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆதோனி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த விபத்துக்கு காரணமான எதிரே வந்த மற்றொரு கார் சம்பவ இடத்திலிருந்து மாயமானதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலை விபத்து பலியானவர்களுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தார்.

1 More update

Next Story