கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே திருமணம் செய்து கொண்டுள்ளார் இளம்பெண்.
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்
Published on

லக்னோ,

சில மனிதர்கள் அவ்வப்போது விநோதமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. திருமண விஷயத்தில் இப்படிப்பட்ட விநோத முயற்சிகளில் ஈடுபடுவோர் பற்றி செய்திகள் வருவது வழக்கம். ஆன்லைனில் திருமணம், பொம்மையுடன் திருமணம், தான் வளர்க்கும் நாய்க்குட்டியுடன் திருமணம், தன்னைத்தானே திருமணம் என உலகம் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் அவ்வபோது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்தவகையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே திருமணம் செய்து கொண்டுள்ளார் பிங்கி (28) என்ற பெண். அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றபோது சிலை மீது தங்க மோதிரம் விழுந்ததாகவும், காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்குப் பூஜை செய்தவுடன் குணமானதாகவும் அவர் கூறுகிறார். இந்த சம்பவங்கள், கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என நம்பியே இந்த திருமண முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com