அமெரிக்காவின் 50 சதவீத வரி இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி: திரிணாமுல் காங். தாக்கு

56 அங்குல மார்பு இருப்பதாகக் கூறும் ஓர் அரசாங்கத்தால் இதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீத வரியை உயர்த்திய நிலையில் கூடுதலாக 25 சதவீத வரியை உயர்த்தி அறிவித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் விலை அமெரிக்காவில் உயர்வதன் காரணமாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த 50 சதவீத வரி விதிப்பு நமது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். து நமது வெளியுறவு கொள்கையின் தோல்வியாகும். இந்தியா இதை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து நம்மை இழிவுபடுத்த விரும்புபவர்களுக்கு இவ்வளவு அதிகாரம் கிடைத்தது எப்படி? 56 அங்குல மார்பு இருப்பதாகக் கூறும் ஓர் அரசாங்கத்தால் இதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?” என கடுமையாக விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு டெக்சாஸில் டிரம்புக்காக பிரசாரம் செய்தார். எனவே, இப்போது டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரியை விதிக்கக் காரணம் அவர்தான்” எனவும் சாடினார்.






