துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகா பயணம்

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி பதவியேற்றார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகா பயணம்
Published on

டெல்லி,

நாட்டின் துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி பதவியேற்றார். துணை ஜனாதிபதியாக பதவியேற்றப்பின் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை கர்நாடகா வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமண மத வழிபாட்டு தலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு செய்கிறார். பின்னர், மைசூருவில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், மண்டியா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கர்நாடகாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com