துணை ஜனாதிபதி தேர்தல்; எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியது ஏன்? திமுக எம்.பி கனிமொழி பேட்டி


துணை ஜனாதிபதி தேர்தல்; எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியது ஏன்? திமுக எம்.பி கனிமொழி பேட்டி
x

தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மட்டும் தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதாகக் கருதிவிட முடியாது என்று கனிமொழி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ'பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வேட்பாளரை தேர்வு செய்துள்ளன” என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை அறிவித்திருப்பதால் போட்டி உறுதியாகியுள்ளது.

” எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியது ஏன் என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி கூறியதாவது: “இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல்; அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்க்கும் வகையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரான பி. சுதர்ஷன் ரெட்டியை முன்மொழிந்துள்ளோம். நாங்கள் தேர்வு செய்த வேட்பாளர் அரசமைப்புச் சட்டத்தை மதிப்பவர். பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதாகக் கருதிவிட முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story