விக்ராந்த் போர்க்கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமற்ற இரவுகளை கொடுத்தது: ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை


விக்ராந்த் போர்க்கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமற்ற இரவுகளை கொடுத்தது: ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 20 Oct 2025 4:12 PM IST (Updated: 20 Oct 2025 4:18 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய ஆயுத படைகளின் திறனை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவாவுக்கு சென்ற அவர் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் ஒளிகளின் திருவிழாவை கொண்டாடினார்.

அப்போது, வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, இன்று ஆச்சரியம் அளிக்கும் திருநாள். எனது ஒருபுறம், சமுத்திரம் உள்ளது. மறுபுறம் அன்னை இந்தியாவின் துணிச்சலான வீரர்களின் வலிமையை நான் கொண்டிருக்கிறேன். இந்த புனித திருவிழாவை உங்களுடன் கொண்டாடுவதில் அதிர்ஷ்டம் கொண்டவனாக இருக்கிறேன் என்றார்.

எல்லையற்ற வானம் ஒருபுறம், எல்லையற்ற ஆற்றல்களை படைத்த ஐ.என்.எஸ். விக்ராந்த் மறுபுறம் உள்ளது. சூரியனின் கதிர்கள் சமுத்திரத்தின் தண்ணீரின் மீது பட்டு ஜொலிக்கும்போது, தைரியம் வாய்ந்த வீரர்கள் ஏற்றி வைத்த விளக்குகளை போன்று உள்ளது என கூறினார்.

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய ஆயுத படைகளின் திறனை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாகிஸ்தானில் உள்ள அனைவரையும் ஐ.என்.எஸ். விக்ராந்த் தூக்கமிழக்க செய்தது என ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை குறிப்பிட்டு பேசினார்.

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட சில நாட்களில், கடற்படை ஏற்படுத்திய பயம், விமான படையின் அசாதாரண திறன் மற்றும் ராணுவத்தின் துணிச்சல் என முப்படைகளின் தனிச்சிறப்பான ஒருங்கிணைப்பு, பாகிஸ்தானை மண்டியிட வைத்தது என்றும் அவர் பேசினார்.

1 More update

Next Story